வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில் பரவலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படும்.

அதிகபட்சமான வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை இருக்ககூடும் என்று தெரிவித்து உள்ளது. வரும் 14-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை அடர்பனியுடன் கடும் குளிர்கால சூழல் காணப்படும். அதில் வரும் 16- 18 ஆம் தேதி வரையிலான 3 நாட்கள் குளிர் உச்சநிலையை அடையும் என வானிலை நிபுணர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.