சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு தொடர்ந்து பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகளை விளக்கு பூஜை நாளில் சபரிமலையில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.