
மத்திய இடைநிலை கல்வி வாரியம் அதாவது சிபிஎஸ்இ பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தியது. அதேசமயம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றன. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 2019 கொரோனா காலத்திற்கு முந்தைய 83.40% தேர்ச்சி சதவீதத்தை விட சிறப்பாக உள்ளது. நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.