அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி பூஜையை பலர் ஒன்பது நாட்கள் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. நவராத்திரியின் போது வீட்டில் ஏதேனும் சண்டையோ, வாக்குவாதமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தெய்வ கடாக்ஷம் பாதிக்கப்படும். முப்பெரும் தேவியரான துர்கை, லட்சுமி, சரஸ்வதி தாயாரை வணங்கி மலர் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.