
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கு மே 15 முதல் மே இருபதாம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தனித் தேர்வர்கள் தங்கள் தேர்வு மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.