10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு தேர்வு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதலாம்.

அண்மையில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.