சீனாவின் தலைநகரான பீஜிங் மாநகரில், அங்குள்ள மிக உயரமான 109 மாடிகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட பிசினஸ் கட்டிடத்தின் மீது, சிறிய ரக விமானம் ஒன்று நேராக வந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்தச் சிறிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து 109 அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் மிக வேகமாக மோதியுள்ளது.
விமானம் மோதிய அந்த அதிபயங்கர வேகத்தில், கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து நாலாபுறமும் சிதறி விழுந்துள்ளன. மேலும், அந்தச் சிறிய விமானம் கட்டிடத்தின் வலுவான சுவரை உடைத்துக்கொண்டு, கட்டிடத்தின் உள்ளேயே புகுந்து நின்றுள்ளது. இந்த விபத்தின் போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தைக் கேட்டு, அப்பகுதியில் இருந்த பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு அவசர அவசரமாக விரைந்து வந்தனர். கட்டிடத்திற்குள் விமானம் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த பலரை, மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
A small plane crashes into a 109-story skyscraper in Beijing, sending debris down the building's side.
Local reports say the pilot Liu Junhua was conducting a solo flight in the local airspace, took off from Shifosi Airport at 17:30, and at 17:40 prepared to return for landing.… pic.twitter.com/drmOgMvQ9E
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 26, 2026
விபத்துக்குள்ளான அந்தப் பிரம்மாண்ட பிசினஸ் கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான கார்ப்பரேட் அலுவலகங்கள் இயங்கி வருவதால், அங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா, அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் பீஜிங் நகர போலீஸார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஹாலிவுட் பட பாணியில் கட்டிடத்திற்குள் விமானம் புகுந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகையே அதிரவைத்து வருகிறது.
