தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் வேகமாக பரவியது. இதனால் மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் அந்த வீடியோக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானது என்று டி ஜி பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவு அனைவரின் கவனம் பெற்றுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராக இருந்தாலும் திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவது இல்லை என பதிவிட்டு இருக்கின்றார்.