தமிழ் சினிமா உலகில் உச்ச நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இந்த நிலையில் சங்கர் தயாரித்த 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்டு கொடுத்து தடை விதித்தது. இதன் காரணமாக சினிமாவில் வடிவேலு 10 வருடங்களாக நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து சென்ற சில நாட்களாகவே வடிவேலு மீது நடிகர் நடிகைகள் என பல நெகட்டிவான கருத்துக்களை கூறி வரும் நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் ஆன சீசர் மனோகர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை கூறி இருக்கின்றார்.

அவர் தெரிவித்துள்ளதாவது ராஜ்கிரண் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில்தான் ஆரம்பத்தில் தான் வேலை பார்த்ததாகவும் அங்கு தான் நடிகர் வடிவேலு வேலைக்கு சேர்ந்தார் எனவும் தெரிவித்தார். ராசாவின் மனசிலே திரைப்படத்தின் ஷூட்டிங் போது வடிவேலு வேலைக்கு சேர்ந்தார். அந்த திரைப்படத்தில் கடைசியாக காமடி ட்ராக் எடுத்திருக்கின்றார்கள். அப்போது ஒரு மணி நேர காட்சியில் வடிவேலை நடிக்க வைத்தார்கள். ஆனால் அது கவுண்டமணி சாருக்கு பிடிக்கலை. ராஜ்கிரணை அழைத்து கோபத்துடன் கத்தினார்.

இதன்பின் ராஜ்கிரண் ஒரு காட்சி தானே என கூறி சமாதானப்படுத்தினார். அதில் வடிவேலுவை கவுண்டமணி மிதிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இந்த சாட்டில் கவுண்டமணி உண்மையாகவே வடிவேலுவை மிதித்தார். இதை கூறி வடிவேல் வருத்தப்பட்டு இருக்கின்றார். வடிவேலுவுக்கு ஆரம்ப காலத்தில் நான் பல உதவிகளை செய்திருக்கின்றேன்.

ஆனால் அவர் அதை மறந்து விட்டார். மேலும் தனக்கு வந்த வாய்ப்புகளையும் அவர் பறித்து அவருக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்தார். பகவதி திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டியதை கெடுத்தது வடிவேலு தான். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அப்பவே அவர் கதையை முடித்து இருப்பேன் என ஆவேசமாக கூறியிருக்கின்றார்.