தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தெலுங்கு சினிமா உலகில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கின்றார். வாரிசு திரைப்பட விழாவில் வம்சி பேசியது பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் தெலுங்கில் உருவாகி இருக்கும் பாலகம் என்ற திரைப்படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது. அவர் பேசியிருப்பதாவது, இந்த சினிமாவில் பைட் இல்லை, டான்ஸ் இல்லை, விஜய் சாரின் பாடி லாங்குவேஜ் இல்லை. ஆனால் சினிமாவில் சூப்பரான பொழுதுபோக்கு இருக்கு. சூப்பர் எமோஷன் இருக்கு சூப்பர் தெலுங்கானா நேட்டிவிட்டி இருக்கு என பேசி இருக்கின்றார்.
இதில் குறிப்பாக வாரிசு திரைப்படத்தில் விஜயையும் பாடி லாங்குவேஜ் பற்றி கிண்டல் அடித்திருக்கின்றார் என்பதை உணர்த்துகின்றது. அவருக்கு வாரிசு படம் லாபம் கொடுக்கவில்லை என்பதால் மீண்டும் தெலுங்கு நடிகர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக இப்படி பேசி இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் வம்சி மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.