ராஜஸ்தானில் 100 நாள் திட்டத்தின் கீழ் அரசு பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது 30 நாட்கள், 60 நாட்கள் மட்டும் 90 நாட்கள் என பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் தொண்ணூறு நாட்களுக்குள் 12 ஆயிரம் ஆட்சேர்ப்புகளை செய்து முடிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது மாநில அரசு 100 நாள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து அரசு பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அரசு விளக்கமளித்துள்ளது. இதற்கான முதல் கட்ட நியமனங்கள் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.