திமுக அரசு பொறுப்பேற்றதின் தொடக்கம் முதலே தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என மகளிர் இடையே ஒரு ஆர்வம் எழுந்த நிலையில் தான் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது  அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்,  இந்த  திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. நேற்றைய முந்தினம் இந்த திட்டத்திற்க்கான சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் IAS அதிகரிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல தமிழ்நாடு  முதலமைச்சர் தலைமையிலும் இந்த திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் என்பது  நடத்தப்பட்டது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை  தயாரிக்கக்கூடிய பணிகள் என்பது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் தான் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம்  யாருக்கு எல்லாம் கிடைக்கும் ? யாருக்கெல்லாம் கிடைக்காது ? என்ற வெளியானது. அந்த தகவலை பார்த்தோம் என்றால் ? அரசு ஊழியர்களுக்கும், அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கும்….  அதே போன்று ஏற்கனவே அரசின்  உதவி தொகையை பெறுபவர்களுக்கு, இந்த திட்டம் பயனளிக்காது என்ற  தகவல் வெளியாகி இருக்கிறது.

இருந்த போதிலும் கூட ஏழை – எளிய – நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த  உரிமைத் தொகை திட்டம் முழுமையாக சென்றைடைய வேண்டும் என்று  தமிழ்நாடு அரசு உறுதியாக இருக் கூடிய நிலையில், வரும் நாட்களில் இன்னும் ஒரு சில நாட்களில் இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்  என்பது தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.