சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கவனக்குறைவால் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நேரில் சென்று சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை வரும். இது கவன குறைவால் ஏற்படவில்லை என எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏதேனும்  தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. உரிய விசாரணைக்குப் பின்னர் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.