தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் அரசு அறிவித்திருந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும் பெண்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு 1000 தருவதாக கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு விதிமுறைகளை அறிவித்தது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த குடும்ப தலைவிகளும் 1000 கேட்கவில்லை, நீங்களே அறிவித்தீர்கள். பின் 2.5 லட்சத்திற்கு மேல் குடும்ப வருமானம் இருக்க கூடாது உள்ளிட்ட 5 விதிமுறைகளை அறிவித்துள்ளீர்கள். இந்த விதிகளை முதலில் ஏன் அறிவிக்கவில்லை? 1000 பெற பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.