நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஆனால் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 21 லட்சம் ஊழியர்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை மாநில அரசே உடனடியாக பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் அந்தந்த ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.