இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் மூலமாக தற்போது நாடு முழுவதும் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்த நூறு நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என பல கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானா மாநிலத்தில் 331 ரூபாயிலிருந்து 357 ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே ராஜஸ்தான் மாநிலத்தில் 231 ரூபாயிலிருந்து 255 ரூபாய் ஆகவும், தமிழகத்தில் 100 நாள் வேலைக்கான ஊதியம் 281 ரூபாயிலிருந்து 294 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.