மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் உரிமையாளர் அறையில் மதுபானம் மற்றும் ஆணுறைகள் போன்றவைகள் கண்டெடுக்கப்பட்டதால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது மாணவிகளின் வகுப்பறையுடன் நேரடியாக ஒரு அறை இணைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் 15 படுக்கைகள் இருந்தது. அதன் பிறகு உயர் ரக மதுபானங்கள், ஆணுறைகள் போன்ற சில ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறை ஒரு வீடு போன்று காணப்பட்ட நிலையில் அங்கு வசித்து வந்த பலர் கூட்டத்திலிருந்து வெளியே வந்தனர். ஆனால் பள்ளியின் முதல்வர் அந்த அறையில் தான் தங்கவில்லை என்று கூறுகிறார். அதன் பிறகு பள்ளியின் மற்ற கட்டிடங்களில் எல்லாம் சிசிடிவி கேமராக்கள் இருக்கும்போது மாணவிகளின் வகுப்பறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட அந்த அறையில் மட்டும் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளியின் முதல்வர் பாதர் டைனசிஸ் ஆர்பி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமினில் தற்போது வெளியே வந்துள்ளார். மேலும் பள்ளியின் முதல்வர் மீது விரிவான விசாரணை நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் நிவேதிதா சர்மா கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.