இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் பான் கார்டு என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணம் ஆகும். அதன்பிறகு பெரிய அளவிலான பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணம்‌. இந்நிலையில் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்காதவர்கள் இன்னும் 3 நாட்களுக்குள் இணைக்க வேண்டும்.

ஒருவேளை பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் அவர்களுடைய பான் கார்டு செயல் இழந்து விடும். அதன் பிறகு பான் கார்டு முடக்கப்பட்டால் ரூ. 10,000 வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பான் கார்டு இணைக்காத அனைவரும் உடனடியாக ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்க வேண்டும். இதற்கு வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற வெப்சைட்டில் சென்று இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஒருவேளை நீங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்து விட்டால் அதை சரி பார்த்துக் கொள்வதற்கு‌ வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxindiaefiling.gov.in என்ற முகவரிக்குள் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.