ATMல் நீங்கள் பணம் எடுக்கும் போது உங்களுக்கு அருகில் உள்ள மெஷினில் பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டு, ஸ்கிமிங் மெஷினை அவர்களிடத்தில் வைத்திருப்பார்கள். அந்த மெஷின் உங்களின் கிரெடிட் (அ) டெபிட் கார்டு தகவலை பெற்றுக்கொடுத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தற்போது டெபிட்கார்டை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

அதன்படி ATM கார்டு ஸ்கிம்மிங்கில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கார்டு ரீடரைப் பயன்படுத்தும்போது உங்கள் சுற்றுப்புறத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் இருக்கிறதா? என உங்களது கணக்கு அறிக்கைகளை தவறாமல் சரிபார்க்கவும். அதன்பின் உங்களது PIN எண்ணை உள்ளிடும்போது கீபேடை மறைப்பது நல்லது.

ஏனென்றால் குற்றவாளிகள் உங்களது பின்னைப் பிடிக்க சிறிய கேமராக்களை பயன்படுத்தலாம். ATM இயந்திரத்தின் கார்டு செருகும் ஸ்லாட் (அ) கீபேடுக்கு அருகில் கூடுதல் சாதனம் எதுவும் இணைக்கப்படவில்லை என்பதை சரிபார்ப்பது நல்லது. உங்களது ATM கார்டில் பின்னை எழுத வேண்டாம். உங்களுக்கு அருகில் நிற்கும் தெரியாத நபர் முன்னிலையில் பின்னை உள்ளிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.