பாகிஸ்தான் நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் 26 திருமணம் செய்து 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அந்த முதியவர் கூறியிருப்பதாவது “ஒவ்வொரு மனைவியிடமும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். குழந்தை பிறந்தவுடன் அவரை விவாகரத்து செய்து விடுவேன். எனக்கு தற்போது நான்கு மனைவிகள் உள்ளனர்.

அவர்களின் வயது 19 முதல் 20 வயதே ஆகும். எனது வாழ்நாளில் 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துக்களை செய்வேன். இதுவே என்னுடைய இலக்கு. எனக்கு ஏற்கனவே 22 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அவரவர் தாய்மார்களுடன் வசித்து வருகின்றனர். விவாகரத்திற்கு பின்பு எனது மனைவிகளின் வாழ்வாதாரத்திற்கு வீடுகள் மற்றும் செலவுக்கான பணங்களை வழங்கியுள்ளேன். இதுவே எனது பொழுதுபோக்கு” என அவர் கூறியுள்ளார்.