
தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் பேரும், 11-ம் வகுப்பில் 92.9% பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கு ஜூலை 4-ம் தேதி துணைத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான அட்டவணை இன்று வெளியாகவுள்ளது.
இந்த துணை தேர்வுக்கு மே 22-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதைத்தொடர்ந்து நாளை முதல் அதாவது மே 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.