தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் நாளை நான்காம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார். அதன் பிறகு மாற்று கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கும் தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்க 15 லட்ச ரூபாய் வரை பணம் கேட்பதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்த நிலையில் விஜய் கட்சி பதவி வாங்க பணம் கொடுப்பது வாங்குவது தவறு எனவும் அப்படி நடப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பதவி பெறுவதற்கு பணம் கொடுப்பதாக பரபரப்பு குற்ற சாட்டினை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது 10 வருடங்களாக பணியாற்றிய எங்களை கட்சி அலுவலகத்திற்கு கூட நுழைய விடவில்லை. கட்சிக்காக உழைத்தவரை விட்டுவிட்டு வீட்டில் துவங்கிய வரை தட்டி எழுப்பி பதவி வழங்குகிறார்கள். இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளனர். மேலும் விஜய்க்கு பதவி வழங்கவில்லை எனில் தற்கொலை செய்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.