‘ஐரோப்பாவின் நிதர்சனம்’ என்ற தலைப்பில், இந்திய வ்லாகர் ஒருவர் தனது ஐரோப்பியப் பயணத்திற்குப் பிறகு அங்குள்ள மோசமான நிலைமைகளைக் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்து ஐரோப்பாவிற்குச் சென்ற அவர், அங்குள்ள தெருக்களில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

நாம் சினிமாவில் பார்க்கும் அழகான ஐரோப்பாவிற்கும், நிஜ வாழ்க்கையில் அங்கு நிலவும் சூழலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக அவர் தனது வீடியோவில் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பாரிஸ் மற்றும் லண்டன் போன்ற முக்கிய நகரங்களில் திருட்டு பயம் அதிகமாக இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வழிப்பறிகள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“>

மேலும் “சுத்தமான நாடுகள்” என்று போற்றப்படும் ஐரோப்பிய நகரங்களின் தெருக்களில் துர்நாற்றமும் அசுத்தமும் மலிந்து காணப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடும் போது இந்த கசப்பான உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். வெளிநாடுகள் குறித்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்கும் வகையில் அமைந்த இவருடைய பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.