உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிசம்பர் 23 முதல் இம்மாதம் 1 வரை திருமலை திருப்பதியில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இம்முறை கூடுதலாக 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஸ்ரீவாரி உண்டியல் மூலம் ரூ.40.10 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.