
திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, இன்னைக்கு ஒவ்வொரு கோயில்களிலும் இருக்கக்கூடிய அர்ச்சகர்களுக்கு அதிகபட்ச ஊதியத்தை கொடுத்து… அவர்களுக்கு சைக்கிள் வாங்குவதற்கு நிதி கொடுத்து.. அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆட்சி திராவிடம் மாடல் ஆட்சி. இதைவிட ரொம்ப முக்கியம்…. கிராமங்களில் இருக்கின்ற கோயில்களுக்கு எல்லாம்….
ஒவ்வொரு கோயிலுக்கும் இரண்டு கோடி நிதி உதவி வழங்கி, கிராமங்களில் இருக்கிற கோயில்களிலும் மக்கள் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஆணையிட்ட ஆட்சி திராவிடம் மாடல் ஆட்சி.ஆனால் இன்னைக்கு இந்து மதத்தை எதிர்த்து உதயநிதி பேசிவிட்டார் என்று இந்தியா முழுவதும் அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்… ஏன் தெரியுமா ?
பொறியில் மாட்டின மாதிரி… மோடி வசமா சிக்கிட்டாரு. எப்படி மாட்டிட்டாரு தெரியுமா ? CAG னா அகில இந்திய ஆடிட்டர் ஜென்ரல் அப்படிங்கறத ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். தணிக்கையாளர் தலைவர் கொடுத்த அறிக்கை என்ன என்றால் ? 7.5 லட்சம் கோடிக்கு மோடியினுடைய ஆட்சியில் ஊழல் நடந்திருக்கு. அதுல எப்படி ஊழல் பண்ணி இருக்காங்கன்னா.. ஊழலை எவ்வளவு டெக்னிக்கா பண்ணிருக்கானா….
7 லட்சம் பேரு ஒரே மொபைல் போன்ல ஆதார் கார்டு காமிச்சு…. அவர்கள் நிதி உதவியை பெற்றிருக்கிறார்கள்… ஒரே நம்பர் 7 லட்சம் பேர். 7 லட்சம் பேருக்கு இந்தியாவுல ஒரே நம்பர் இருக்குமாடா… எப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய ஊழலை இந்த நாட்டிலே செய்துள்ளது என தெரிவித்தார்.