ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டார். இதனால் இவர் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அப்போது சோனோகிராஃபி எடுத்ததில் அவரது பித்தப்பை கற்களால் நிரம்பி இருப்பது தெரியவந்தது. மேலும் பித்தப்பையின் அளவு 7 x 2 செமீ முதல் 12 x 4 செமீ வரை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது.

இதனால் தினேஷ் ஜிண்டால் என்ற மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவருக்கு 30 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையில் அவரது பித்தப்பையில் இருந்து மொத்தம் 6110 கற்கள் எடுத்துள்ளனர். இதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதன் சரியான எண்ணிக்கையை கூறுவதற்காக ஊழியர்களுக்கு குறைந்தது இரண்டரை மணி நேரம் ஆகியுள்ளது. அவர் கணைய அழற்சி, மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர் கூறினர்.