
மக்களவை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கை குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார். இந்தக் கூட்டத்தில் யுபிஐ மோசடி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், யூபிஐ பண பரிவர்த்தனையில் நடப்பு ஆண்டான 2024 செப்டம்பர் மாதம் வரை 6.32 லட்சம் பணப்பரிவர்த்தனை மோசடிகள் நடைபெற்று உள்ளது. இந்த மோசடிகளில் ஏற்பட்ட இழப்பீடு ரூபாய் 458 கோடியாகும். இதேபோன்று கடந்த 2023 நிதியாண்டில் 13.42 லட்ச மோசடிகள் பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து 2023-2024 நாளில் மட்டும் மோசடி செய்யப்பட்ட பணம் மதிப்பு ரூபாய் 1087 கோடியாகும். இதேபோன்று 2022-2023 நிதியாண்டில் 7.25 லட்ச மோசடிகள் பதிவாகியுள்ளது. இதன் பணமதிப்பு ரூபாய் 573 கோடியாகும். ஆனால் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கணக்கிடப்பட்ட மோசடிகள் சென்ற ஆண்டு விட 85% அதிகமாக இருக்கும் என இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி,NPCI ஆகியவை தொடர்ந்து UPI பண பரிவர்த்தனை மோசடியை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
NPCI தொடர்ந்து வாடிக்கையாளர்களின் எண்கள், பணப்பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசால் எஸ்எம்எஸ் கள், ரேடியோ மூலம் விழிப்புணர்வு போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே UPI மோசடி குறித்த விழிப்புணர்வை வங்கிகள் மூலம் தொடர்ந்து செய்து வருகிறது.இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.