தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நிஜ வாழ்க்கையைப் போலவே சமூக வலைதளங்களிலும் தனது அசுர பலத்தைக் காட்டி வருகிறார். தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (cmotamilnadu) தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக 4 லட்சம் பேர் மட்டுமே ஃபாலோ செய்து வந்த நிலையில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு இந்த எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.

மற்ற மாநில முதல்வர்களுக்கே சவால் விடும் வகையில், ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பின்தொடர்வது அரசியல் மற்றும் இணையவாசிகளிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கோட்டையில் ஒரு பக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள விஜய், மறுபக்கம் இணையத்திலும் தனது பாப்புலாரிட்டியை ‘பீக்’கிற்கு கொண்டு சென்றுள்ளார்.