சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கணவர் ஒருவர் தனது மனைவியிடம் கேட்ட ஒரு மிக எளிமையான கேள்விக்கு, அவர் கால்குலேட்டரைப் பயன்படுத்திப் பதிலளித்த வீடியோ இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில், “ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 50 ரூபாய் என்றால், 1000 கிராம் உருளைக்கிழங்கின் விலை எவ்வளவு?” என்று கணவர் கேட்கிறார். ஒரு கிலோ என்பது 1000 கிராம் தான் என்ற அடிப்படைத் தர்க்கத்தை யோசிக்காத அந்தப் பெண், உடனே தனது மொபைலில் கால்குலேட்டரைத் திறந்து கணக்குப் போடத் தொடங்கினார்.

“>

 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், அந்த வேடிக்கையான தருணத்தைப் வீடியோ எடுத்துப் பகிர, அது தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. “படித்த படிப்பு எங்கே போச்சு?” என்றும் “கால்குலேட்டர் இல்லாம நம்மால வாழவே முடியாதா?” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை கிண்டலடித்துப் பகிர்ந்து வருகின்றனர்.