“வர்ற தலைமுறைக்கு என்ன மாதிரியான மெசேஜை சொல்ல வர்றீங்க?” என்று பிரபல நடிகர் அமீர் கான், கௌரி ஸ்ப்ராட் என்பவருடன் செய்துகொண்ட புதிய திருமண ஒப்பந்தம் இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோத திருமண ஒப்பந்த நிகழ்வின் போது அமீர் கானின் முதல் மனைவி, இரண்டாவது மனைவி, அவரது மகன், மகள் மற்றும் கௌரி ஸ்ப்ராட்டின் குழந்தைகள் என ஒட்டுமொத்தக் குடும்பமும் நேரில் நின்று வேடிக்கை பார்த்தது தான் நெட்டிசன்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்ப அமைப்பையே கேலிக்குள்ளாக்கும் வகையில் அரங்கேறிய இந்தச் சம்பவம், இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
Amir Khan signed a marriage contract with Gauri Spratt in front of his 1st wife, 2nd wife, his son, his daughter, Gauri Spratt's kids 😭
Imagine the kind of message he is giving to the coming generations.
Shame that leaders like Raj Thackeray also attended the function. pic.twitter.com/G238Z2xnh2
— Chota Don (@choga_don) July 5, 2026
இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வில் ராஜ் தாக்கரே போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியது, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல நெட்டிசன்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. “சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களே இதற்கு சப்போர்ட் பண்ணலாமா?” என்று மக்கள் கமெண்ட் பாக்ஸில் தங்களது கண்டனங்களை அள்ளி வீசி வருகின்றனர். அமீர் கானின் இந்த புதிய திருமண ஒப்பந்த விவகாரமும், அதில் பங்கேற்ற பிரபலங்களின் பின்னணியும் தான் இப்போது சோஷியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்காக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
