அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றம் அடைவது ஏன் என அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டவர்கள் தான் அதிமுகவினர்.

மாரடைப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் அதை நாடகம் எனக் கூறுவது தவறு. மாரடைப்பு குறித்து தெரியாதவர் எப்படி முதலமைச்சராக இருந்தார். ESIமருத்துவமனை அறிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.