தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரிகம் ஏற்படலாம்.

எனவே மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஜூன் 18ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவித்துள்ளது.