ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பர்கத் நகர் பகுதிக்கு, பாரான் மாவட்டத்தில் இருந்து ஷாப்பிங் செய்ய வந்த தாயும், மகளும் அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவத்தைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் வைத்திருந்த ₹50,000 ரொக்கப் பணம் கீழே விழுந்ததைக் கண்ட இரு இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் வந்து அந்தக் கட்டு நோட்டுகளை எடுத்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கீழே விழுந்த பணத்தைத் திருடிச் செல்லும் இரு இளைஞர்களையும் தாயும் மகளும் தடுக்க முயன்றபோதும், அவர்களால் இருவரையும் பிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>