ஈரான் உச்ச தலைவர் மற்றும் 40 முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டும், அந்த நாட்டு ஆட்சியை இன்னும் கவிழ்க்க முடியாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் திணறி வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கய்தாப் மற்றும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானில் மக்கள் கிளர்ச்சியைத் தூண்டி, அதன் மூலம் ஆட்சி மாற்றத்தைக் (Regime Change) கொண்டுவர இஸ்ரேல் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. ஈரானில் போராட்டங்களை ஒடுக்கும் முக்கிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொல்வதன் மூலம், மக்களின் பயத்தைப் போக்கி அவர்களை வீதிக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
மறுபுறம், ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியைத் தகர்ப்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இது நடந்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஈரானுக்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலிய ஒற்றர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஒற்றர்களை ஈரான் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “ஈரான் என்ற அச்சுறுத்தலை முழுமையாக வேரறுப்பதே எங்கள் இலக்கு” என ட்ரம்ப் கூறியிருப்பது, வரும் நாட்களில் நேரடித் தரைவழித் தாக்குதல் (Ground Invasion) நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
