ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் வசந்த் மற்றும் பிரவீன் ஆகியோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ரத்தனகிரி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சம்பவ நாளில் ஒன்றாக சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர். இவர்கள் கீழ் மின்னல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்த தகவலின் பேரில் வாலாஜா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.