தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வருகிற 27ஆம் தேதி பிறந்த நாள். இதனை முன்னிட்டு திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஒரு பள்ளி குழந்தைகளின் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஹாப்பி பர்த்டே உதய் அண்ணா என்று அடிக்கடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பயனர் இது தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புது Syllabus-ஆ என்று கேள்வி எழுப்பியுள்ளார். எதற்காக இது பள்ளி குழந்தைகளிடம் போதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.