பாஜக கட்சியின் நிர்வாகி அலிஷா அப்துல்லா. இவர் முன்னதாக  ஒரு பேட்டியில் ஹிந்தி தெரிந்தால் வட மாநிலத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு நேர்காணல் பேட்டியில் கூறியதாவது, வடமாநிலத்தவர்கள் ஒருவேளை ரேப் செய்ய வந்தால் ஹிந்தி மட்டும் தெரிந்து கொண்டால் அவர்களை திட்டுவதோடு அவர்களிடமிருந்து கத்தி கூச்சலிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அப்போது அவரிடம் பேட்டி எடுத்தவர் ஹிந்தி தெரிந்த நிர்பையா எதற்காக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று கேட்டார். அதோடு மொழி தெரிந்தால் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் எந்த அரசியலமைப்பு சட்டத்தில் ஹிந்தி மொழியை ஏற்க வேண்டும் என்று இருக்கிறது என தமிழக அரசும் கேட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் போக்கு என்பது நிலவும் நிலையில் தற்போது பாஜக அலிஷா அப்துல்லா ஹிந்தி தெரிந்தால் வட மாநிலத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.