தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட போது அதில் திராவிடர் நல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திமுகவினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தவறுக்கும் ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக அரசை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்திருந்த நிலையில் தற்போது அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆரியனர் செய்யும் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தினால் முன்னாள் கவர்னர் அக்காவுக்கு ஏன் கோபம் வருகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் எல்லா பக்தர்களுக்கும் எல்லா வசதிகளும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் குதூகலிப்பது போன்று அது கிரிவலம் அல்ல ‌ சரிவலம். கருணாநிதி ஓடாத தேரை ஓட வைத்தவர். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணி செய்தவர் முதல்வர் ஸ்டாலின். எல்லோருக்கும் எல்லாம் என்று உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை பார்த்தால் மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம்தானே. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஆன்மீகமும் அரசியலும் கலக்காது. மத்திய அரசாங்கத்தின் டிடி தமிழ் போல் அக்காவுக்கு ஹிந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.