பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகரான ஷியா முகைதீன் “லாரன்ஸ் ஆப்ஸ் அரபிக்” என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதனை அடுத்து இவர் பல்வேறு படங்களில் தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து நாட்டின் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரபல நடிகர் ஷியா முகைதீன் இன்று காலை காலமானார். இவருடைய மறைவிற்கு பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.