ஹார்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் வணிகக் கப்பல்களை மீட்பதற்காக அமெரிக்கா ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்காக 15,000 துருப்புகள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஆகியவற்றை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது.அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்

மேலும் ஈரான் உடனான போர்ச் சூழலால் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமார் 2,000 கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளும் கடந்த சில வாரங்களாகத் தவித்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நடவடிக்கை ஒரு ‘மனிதாபிமான முயற்சி’ என்றும், சம்பந்தப்பட்ட நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திங்கள்கிழமை காலை முதல் தொடங்கும் இந்த மீட்புப் பணியின் மூலம், உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் மாலுமிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதோடு, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்படும். இருப்பினும், இந்த மனிதாபிமான நடவடிக்கையில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அது ராணுவ ரீதியாகக் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.