
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி + வெற்றி பெற்ற நிலையில் நேற்று அமெரிக்காவுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிப் 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில் விராட் கோலி டக் அவுட் ஆகிய நிலையில் ரோஹித் சர்மா 3 ரன்னில் அவுட் ஆனார்.
இதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய நிலையில் அவர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ரிஷப் பண்ட் 18 ரன்கள் எடுத்த அவுட்டான நிலையில் ஷிவம் துபே களம் இறங்கினார். இந்திய அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு பெனால்டி முறைப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்ட நிலையில் அதன்பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து அரை சதம் குவித்தார். இறுதியில் 18.2 ஓவரின் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. மேலும் தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.