
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கணேஷ்பாபு இயக்கியுள்ள நிலையில் அபர்ணாதாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷ் பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த தகவலை நடிகர் கவின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஹலோ நான் தனுஷ் பேசுறேன் என்று ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை என்னால் வாழ்வில் மறக்கவே முடியாது.
இது என் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம் என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று டாடா படத்தின் ஹீரோயின் அபர்ணா தாசுக்கும் நடிகர் தனுஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அபர்ணாதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் ஹலோ நான் தனுஷ் பேசுகிறேன் என்று அவர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. பல அற்புதமான படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் என்னை பாராட்டி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிப்பு ராட்சசன் என்ற பெயரிடத்த நடிகர் தனுஷே டாடா படத்தை பார்த்துவிட்டு கவின் மற்றும் அபர்ணா தாஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நேரடியாக பாராட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
A fine moment to cherish forever 🙂
Thanks a lot @dhanushkraja sir 🙏🏼♥️ pic.twitter.com/XDqI9HV1jh— Kavin (@Kavin_m_0431) February 21, 2023