முதல்வர் ஸ்டாலின் தன்னை அப்பா என்று தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் அழைப்பதாக மகிழ்ச்சியாக கூறி வருகிறார்.  அதன்பிறகு பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டின் போது அப்பா என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதோடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். கடந்த சில நாட்களாகவே அப்பா என்ற சொல் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் ஸ்டாலின் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை பார்த்து காப்பியடிப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அதாவது ஜெயலலிதாவை பார்த்து அனைவரும் அம்மா என்று அழைத்த நிலையில் அதை பார்த்து தான் ஸ்டாலின் தன்னை அப்பா என்று அழைக்குமாறு கூறுவதாகவும் நாடு முழுவதும் பிரதமர் மருந்தகங்கள் இருக்கும் நிலையில் அதை பார்த்து காப்பி அடித்து தான் முதல்வர் மருந்தகங்கள் என்று ஸ்டாலின் பெயர் வைத்ததாகவும் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அப்பா என்ற அழையுங்கள்… அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் முதலமைச்சர் மருந்தகங்கள்… பிரதமர் மோடி அவர்களின்.. பிரதமர் மருந்தகங்களை பார்த்து. …ஸ்டிக்கர் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற. திரு எம் ஜி ஆர் அவர்களின். பாடலைப் பாடி திரு எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் … #ஸ்டிக்கர் ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.