
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
அப்பாவி பொதுமக்கள் மீதும் மதத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்தியா தெளிவாக தெரிவித்தது.
இருப்பினும் இந்த ஆணவம் பிடித்த பாகிஸ்தான் இந்தியாவில் தொடர்ந்து மூன்று நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உட்பட பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் நிலையில் இதனை இந்தியா வானில் வைத்தே வெற்றிகரமாக முறியடிக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம் பி சாகித் அகமது என்பவர் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்ததோடு பிரதமர் ஷெபாஷ் செரிப்பையும் விமர்சித்துள்ளார். இவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, பாகிஸ்தான் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்க கூட பயப்படுகிறார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ஒரு கோழை. அவருக்கு தைரியமே கிடையாது. மேலும் பாகிஸ்தானின் நரிப்படையால் சிங்கங்களை எதிர்த்து போராட முடியாது என்று கூறியுள்ளார்.