சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹4,401 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

​தற்போது ஒரு கிராம் தங்கம் ₹12,515-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்குத் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் இனிமேல் தங்கம் வாங்கவே முடியாதோ என்ற பெரிய பயத்தில் இருக்கிறார்கள்.