எம்.எஸ் தோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது..

எம்எஸ் தோனி எங்கு சென்றாலும் ரசிகர்களிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியாதோ என்னமோ தெரியவில்லை. ஏனெனில் அவரது ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. ஏனென்றால் ரசிகர்கள் அவரை எப்போதும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஐபிஎல் தவிர வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடாவிட்டாலும், சிஎஸ்கே கேப்டன் அவ்வப்போது பொது இடங்களில் காணப்படுகிறார். அப்போது செல்ஃபிக்காக ரசிகர்கள் சூழ்கின்றனர். தோனி எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த வீடியோ அனைத்தும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தோனியின் அதேபோன்ற வீடியோ வைரலாகி வருகிறது, அதில் தோனியின் புதிய தோற்றம் ரசிகர்கர்களை கவர்ந்துள்ளது.. 

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், 5 முறை ஐபிஎல் வென்ற கேப்டன் தோனி போனிடெயில் (Ponytail) சிகை அலங்காரத்தில் காணப்படுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், பேருந்தில் இருந்து இறங்கி தோனி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை நன்றாக கவனிக்கும்போது தலைமுடியை கொண்டை போட்டு கட்டியிருந்தார். இதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தோனி பல ஆண்டுகளாக பல விதமாக தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டே விளையாடியுள்ளார். தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக முடியை வளர்த்து வருகிறாரா என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே 2024 ஐபிஎல்லில் பழைய தோனி போல நிறைய முடியுடன் தோனி ஆட வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தோனி நீண்ட முடியுடன் 2024 ஐபிஎல்லில் ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆனால் அவரது பழைய  ஹேர் ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏனெனில் அவர் நிறைய முடியை வளர்த்து இருப்பார். தோனியை அப்படிப்பார்த்து ரொம்ப வருடம் ஆகிவிட்டது. மஹி கடைசியாக 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினார், அங்கு அவர் சென்னை அணியை 5வது முறையாக சாம்பியன் ஆக்கினார்.

 3 ஐசிசி கோப்பையை வாங்கி கொடுத்த தோனி :

2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி, முதல் ஆண்டிலேயே டி20 உலகக் கோப்பையை கைப்பற்றினார். கம்பீர் மற்றும் தோனி இணைந்து 2011 ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்றனர். போட்டியின் இறுதிப் போட்டியில் இருவரும் சிறப்பான அரைசதம் அடித்தனர். தோனி ஆட்டமிழக்காமல் 91 ரன்களும், கம்பீர் 97 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மகேந்திர சிங் தோனியின் தலைமையில், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உட்பட 3 ஐசிசி பட்டங்களை இந்தியா வென்றது. 2019 உலகக் கோப்பை தோனியின் கடைசி போட்டியாகும், அதன் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல்லில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.

 

https://twitter.com/CricPeddler/status/1708145128911835228