பீகார் மாநில கூட்டுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், 8400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விரைவில் பொது சேவை மையங்களாக செயல்பட தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மையங்கள் கிராமப்புறங்களில் வங்கி வசதிகள், ஆதார் அப்டேட் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற முன்னுருக்கும் மேற்பட்ட சேவைகளை வழங்க உள்ளது. அந்த மாநிலத்தில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு புதிய பெட்ரோல் மற்றும் டீசல் டீலர் ஷிப்கள் மற்றும் எல்பிஜி விநியோகஸ்தர்களை ஒதுக்கீடு செய்வதிலும் இந்த மையம் முன்னுரிமை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது PACS என்பது அடிமட்ட அளவிலான கூட்டுறவு கடன் நிறுவனங்கள் ஆகும். இதன் மூலம் விவசாய விவசாயிகளுக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால அளவில் கடன் வழங்குகின்றது. இதனை வலுப்படுத்த கூட்டுறவு சங்கங்களை பொது சேவை மையங்களாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.