பீகார் மாநிலத்தில் 18 வயது இளம் பெண்ணை எட்டு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் வெறும் ₹100 செலவுக்காக கொடுத்து அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை வாய்ப்புக்காக ஆசை காட்டிய ஒரு இளைஞர், அந்த பெண்ணை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அந்த பெண்ணுக்கு வெறும் ₹100 கொடுத்து அனுப்பிவிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்தி வருகிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.