தமிழகத்தில் சுய தொழில் செய்பவர்களுக்கு உதவும் விதமாக அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,மாவட்ட தொழில் மையத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு திட்ட மதிப்பின் உச்சவரம்பு 15 லட்சம் ரூபாயாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தொகைக்கு மூன்று லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் மானிய தொகை வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தின் கீழ் கடல் உதவியும் தொழில் செய்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட தகுதி உடையவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.