வேலூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவர் ஹோட்டல் மற்றும் ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த நிலையில் சென்னைக்கு வந்த அவர், மெட்ரோ ரயிலில் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்வதற்காக சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள லிப்டில் ஏறியுள்ளார்.

அப்போது அவருடன் ஏறிய வாலிபர் தனியாக இருந்த அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து அந்தப் பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் புகாரின் பேரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் என்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.